Although the combination of horoscopes and fingerprints is a comparative study, it also combines astrological nuances. Outcomes are determined as soon as a person is born.Although the horoscopes are not calculated, the effects are recorded by the Lord in the palm of the hand by the human mind. Fingerprinting makes a man understand many things. His characteristics dictate the status of the spouse from whom the family influences at birth and future lifestyles have come. The lines on the hands tell the future. When we look at our palms many lines are seen crosswise. There are many different types of hands. It is impossible for one to be like the other. There will definitely be a small variation. Thus while there are many different types of hands there are mainly seven types of systems that are somewhat mixed. Benefits should be determined by the structure of the fingers and the position of the ridges and the linearity. Some symbols can be found on the mounds. They also have benefits. Only by knowing those codes first will it be convenient to determine the benefits. There are squares, dots, zigzags, loops, star, braid, trident, broken lines, cone, wheel, crutch, veil, lines. Thus the reason for the change in the lines is the connection between the brain and the fingerprints.
ஜாதகமும் கைரேகையும் இணைந்து ஒப்பு நோக்குதல் ஆய்வு என்றாலும் ஆங்காங்கே ஜோதிட நுணுக்கங்களை இணைத்துவரும். ஒரு பிறவி பிறந்தவுடனே பலாபலன்களை நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றது. ஜாதக கணக்கீடுகள் போடவில்லை என்றாலும் அந்தப் பலாபலன்கள் இறைவனால் மனித மனதின் மூலமாக உள்ளங்கைகளில் ரேகைகளாக பதியச் செய்து விடுகின்றது.கைரேகை ஒரு மனிதன் பல விஷயங்களை விளங்க வைக்கின்றது அவனின் குணாதிசயங்கள் பிறந்த குடும்பம் செல்வாக்கு எதிர்கால வாழ்க்கை முறைகள் வந்துள்ள துணைவியின் நிலைமை கூறுகின்றன. கைகளில் உள்ள கோடுகள் எதிர்காலத்தை கூறுகின்றது.நம்முடைய உள்ளங்கைகளைப் பார்க்கும் போது பல கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக காணப்படுகின்றது.கைகளில் பலவிதமான கைகள் உள்ளன. ஒன்று போல மற்றொன்று இருப்பது என்பது இயலாது. சிறு மாற்றமேனும் நிச்சயம் காணப்படும் இவ்விதம் பல வகையான கைகள் இருந்த போதும் முக்கியமாக ஏழ விதமான அமைப்புகளையும் சற்றே கலந்தவாறே இருக்கும் விரல்களின் அமைப்பையும் மேடுகளின் நிலைகள் ரேகைகளகன் தன்மை ஆகிய அனைத்தும் கொண்டே பலன்களை நிர்ணயிக்க வேண்டும். மேடுகளில் சில குறியீடுகள் காணப்படும். அவற்றிற்கும் பலன்கள் உண்டு. முதலில் அந்த குறியீடுகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் பலன்களை நிர்ணயம் செய்ய வசதியாக இருக்கும். சதுரங்கள், புள்ளிகள், தீவுக்குறிகள், உடுக்கை, நட்சத்திரம்,பின்னல்,திரிசூலம், உடைந்த ரேகைகள், சங்கு,சக்கரம், பிறை,வேல்,ரேகை ள் உண்டு. இவ்வாறு ரேகைகள் மாற்றம் அடைவதற்கு காரணம் மூளைக்கும் கைரேகைக்கும் உள்ள தொடர்புதான்.