Numerology is about how numbers and letters affect human life. This art is very ancient in our arts. Date of birth number indicates under which dominance you were born.Depending on the number, of anatomical features the date of birth number one will also indicate eligibility. The baby is born. It is to live a long life and education, to attain the highest level of life with comforts. Parents think their child should be appreciated by everyone in the community. With that in mind, they will name the famous and famous people like forefather (Patton and Muppaton) who lived happily ever after. Or put the name of their deity. Only English letters are more valuable in numerology. One number is set to friendly or hostile to another number. When naming a baby, the mother should choose a name that matches the father’s and mothers lucky number. Only then will the child be included with the parents and will do the chores of keeping them. If the base of the numbers wakes up, the base of the letter sounds. Sound determines language. All movements in the world are based on sound. So the sound determines the numbers and Letters. The numbers depend on the planets. The planets are dominating the world.
எண் கணிதம் என்பவை எண்களும் எழுத்துக்களும் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதை பற்றின இக்கலை நம் கலைகளில் மிகப் புராதனமானது பிறந்த தேதி எண் நீங்கள் எந்த ஆதிக்கத்தின் கீழ் பிறந்தவர் என்பதைக் குறிக்கிறது. அந்த எண்ணை அனுசரித்தே சரீர அமைப்பு, குணங்களும் பிறந்த தேதி எண் ஒருவர் தகுதியையும் குறிக்கும்.குழந்தை பிறக்கிறது. அது நீண்ட ஆயுளுடன் கல்வி கற்க வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்து சுக போகங்களுடன் வாழ வேண்டும். சமூகத்தில் அனைவராலும் பாராட்டப்பட வேண்டும் என்றே பெற்றோர் நினைப்பார்கள். அந்த நினைப்பிலேயே அவர்கள் பெயரும் புகழும் பெற்ற, சுக போகத்துடன் வாழ்ந்த பாட்டன்,முப்பாட்டன் போன்றவர்களின் பெயரைச் சூட்டுவார்கள். அல்லது தம் குலதெய்வத்தின் பெயரை வைப்பார்கள். எண் ஜோதிடத்தில் ஆங்கில எழத்துகளுகே மதிப்பு அதிகம். ஒரு எண் மற்றொரு எண்ணுக்கு நட்பாகவோ வழியாகவோ பகையாகவோ அமைகிறது. குழந்தைக்கு பெயர் சூட்டும் போது தாய் தந்தையின் அதிஷ்ட விதி எண்ணிற்கு நட்பு எண் வரும் வண்ணம் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தை பொற்றோருக்கு அடங்கியிருப்பதுடன் அவர்களை வைத்து காப்பாற்றும் பணிவிடைகள் செய்யும். எண்களின் அடிப்படை எழுந்து என்றால், எழத்தின் அடிப்படை சப்தம். சப்தம் தான் மொழியை நிர்ணயம் செய்கின்றது. உலகின் அனைத்து இயக்கங்களுமே சப்தத்தின் அடிப்படையில் தான் உள்ளது. எனவே சப்தத்தை எழத்து எண்களை நிர்ணயிக்கின்றது. எண்கள் கிரகங்கள் சார்ந்துள்ளது. கிரகங்களோ உலகை ஆட்டிப் படைக்கின்றது.